கையடக்கத் தொலைபேசி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் முகத்தைக் கடித்துவிட்டு தப்பிச்சென்ற சந்தேக நபரை புலத்கொஹுபிட்டிய பொலிஸார் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர் இதற்கு முன்னரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபரை கைது செய்யச் சென்ற வேளை பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்ட பின்னர், சந்தேக நபர் கான்ஸ்டபிளின் கன்னத்தை கடித்துவிட்டு தப்பிச் சென்றார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை தேடி பொலீஸார் வலைவீசியுள்ளனர்.