ஜனவரி மாதம் முதல் நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வற் வரி அதிகரிப்பின் காரணமாக இவ்வாறு நீர்க் கட்டணமும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, காரணமாக நீர் கட்டணம் 03 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வற் வரி அதிகரிப்பின் காரணமாக பேருந்து கட்டணம் உள்ளிட்ட மேலும் பல சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.