Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு 430 மின்சார மோட்டார் சைக்கிள்கள்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் மீன்வளத்துறையில் களப்பணியாற்றும் அதிகாரிகளின் சேவைத்திறனை மேம்படுத்தும் நோக்கில், 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு இந்தியாவும் இலங்கையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

குறித்த ஒப்பந்தம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் மீன்வள, நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார்.

இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கம் 265 மில்லியன் இலங்கை ரூபாவை மானியமாக வழங்கவுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்த உதவி வழங்கப்படுகிறது.

இதன் கீழ், மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகமை (NARA) உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் கள உத்தியோகத்தர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இந்த மோட்டார் சைக்கிள்களின் பயன்பாட்டின் மூலம் அதிகாரிகள் களப்பணிகளை விரைவாக முன்னெடுப்பதுடன், மீனவ சமூகங்களுடன் நேரடித் தொடர்பைப் பேணவும், சேவைகளை வினைத்திறனுடன் வழங்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் இந்தத் திட்டம், அரசாங்கத்தின் ‘சுத்தமான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளுக்கும் பங்களிப்புச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் வீடமைப்பு, சுகாதாரம், கல்வி, மீன்பிடி, போக்குவரத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

மனைவி, பிள்ளைகள் கண்முன்னே முஸ்லிம் வர்த்தகர் மீது பொலிஸார் தாக்குதல்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 31, 2026
பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!
செய்திகள்

பாடசாலை என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மாத்திரம் கல்வி வழங்கும் இடமல்ல!

October 31, 2026
இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!
செய்திகள்

இலங்கையின் மீன்பிடித் தொழிற்துறையை டிஜிட்டல் மயமாக்க FAO ஒத்துழைப்பு!

October 31, 2026
வட்ஸ்அப் குழு மூலம் பல இலட்சம் மோசடி செய்த பெண் கைது
செய்திகள்

வட்ஸ்அப் குழு மூலம் பல இலட்சம் மோசடி செய்த பெண் கைது

October 31, 2026
7 வயதில் இலங்கையிலிருந்து படகில் இந்தியா வந்தவர்; 30 ஆண்டுகளாக அடையாளமின்றி தவிக்கும் இளைஞர்!
செய்திகள்

7 வயதில் இலங்கையிலிருந்து படகில் இந்தியா வந்தவர்; 30 ஆண்டுகளாக அடையாளமின்றி தவிக்கும் இளைஞர்!

October 31, 2026
பைனான்ஸ் நிறுவனத்தில் வரலாறு காணாத கிரிப்டோ கொள்ளை; 6.3 பில்லியன் டொலர் டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டு!
செய்திகள்

பைனான்ஸ் நிறுவனத்தில் வரலாறு காணாத கிரிப்டோ கொள்ளை; 6.3 பில்லியன் டொலர் டிஜிட்டல் சொத்துக்கள் திருட்டு!

October 31, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு