சாட் ஜிபிடி (Chat GPT), பார்டு (Bard), ஜெமினை (Gemini), க்ரோக் (Grok) என பல செய்யறிவு தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி அசத்திக்கொண்டிருக்கும் சமயத்தில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் தனது செய்யறிவு தொழில்நுட்பத்தையும் போட்டியில் நிறுத்தியிருக்கிறது.
மைக்ரோசாப்டின் செய்யறிவு தொழில்நுட்பமான கோபைலட் (Copilot) இப்போது ஐபோன் மற்றும் ஐபேட்-களில் செயலி வடியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேட் கிபிடி-4 திறன்களை செல்போன்களுக்கு கொண்டுவந்த பெருமையை மைக்ரோசாப்ட் நிறுவனம் தட்டிச்சென்றுள்ளது.
இந்த செய்யறிவு தொழில்நுட்பம் இதுவரை வலைதளங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.
அது இப்போது செயலி வடிவில் ஐபோன்களிலும் செயல்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
விரைவில் ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கும் இந்த சேவைகள் அறிமுகமாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பம் பல்வேறு மொழிகளில் பேசும் திறன்கொண்டது எனவும், கேட்கும் வகையில், தரவுகளை வடிவமைத்துத் தரக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.