Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

தொலைபேசி மூலம் இலஞ்சம் வங்க முற்பட்ட வீதி போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கைது

1 year ago
in செய்திகள்

கிண்ணியா பொலிஸ் நிலைய வீதி போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் குற்ற தடுப்பு பிரிவினரால் நேற்றையதினம் (29) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கிண்ணியா புகாரி சந்தியில் வைத்து, நபர் ஒருவரிடம், பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட போதே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார் என இலஞ்ச ஊழல் குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

திருகோணமலை அபேபுர பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த (27) கிண்ணியா பிரதான வீதியில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் ஒருவரை, இவர் தடுத்து விசாரித்திருக்கின்றார்.

இதன்போது, தன்னிடம் வாகன அனுமதி பத்திரமோ , சாரதி அனுமதி பத்திரமோ இல்லை என்று கூறிய போது, இவரது அடையாள அட்டையை வாங்கிய பின்னர் , தனது தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் வழங்கி, தேசிய அடையாள அட்டை எடுப்பதற்கு தன்னோடு தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்படி, குறித்த நபர் தொலைபேசி மூலம் உரையாடிய போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பத்தாயிரம் ரூபா கப்பமாக கோரியதாகவும், அவற்றை கிண்ணியா புகாரி சந்திக்கு கொண்டு வருமாறும் கேட்டுள்ளார்.

இதற்கு இணங்க, குறித்த நபர் இலஞ்ச ஊழல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துவிட்டு, அந்த இடத்துக்கு பத்தாயிரம் ரூபா பணத்தோடு சென்று, பொலிசாரிடம் கொடுக்கும் போது, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர். அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்
காணொளிகள்

பிழையான தராசுகளை பயன்படுத்தி திருக்கோவிலில் நெல் கொள்வனவுசெய்த இடைத்தரகர்கள்

August 3, 2026
கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி
செய்திகள்

கல்முனையில் கோர விபத்து; வாகனம் லொத்தர் கடைக்குள் பாய்ந்ததில் சாரதி பலி

August 3, 2026
சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச
செய்திகள்

சிங்களவர்களின் வரிப்பணத்துடன் செம்மணி மனிதப்புதைக்குழி அகழப்படுகிறது; விமல் வீரவன்ச

August 3, 2026
06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை
செய்திகள்

06ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கில் மழை; பின்னர் கடும் வெப்பம், அதன்பின் அதிக மழை – பிரதீபராஜா எச்சரிக்கை

August 3, 2026
ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
செய்திகள்

ரூ.30.6 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

August 3, 2026
Next Post
முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீ

முல்லைத்தீவு பாடசாலை ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை துரத்தி துரத்தி கொட்டிய தேனீ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு