2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக ஜனவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்படும். அப்போது ஒருபுறம் பொருளாதாரம் மீட்சி ஏற்படும்.
மேலும் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள். சீர்திருத்த செயல்பாட்டில், குறுகிய காலத்தில், அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது செலுத்தப்படாமல் இருந்த அனைத்து நிலுவை கட்டணங்களையும் செலுத்துவதற்கு திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கான கட்டணங்களும் கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.