நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் இலங்கை அரசியல் அரங்கில் இதுவரை இல்லாத அளவுக்கு உக்கிரமான போரை உருவாக்கும் என அனுரகுமார திஸாநாயக்க நேற்று (02) தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், தற்போது உருவாகியுள்ள அரசியல் முகாம்களும், அரசியல் பிளவுகளும் சாதாரணமானவை அல்ல. இம்முறை அரசியல் போரில் மக்கள் விடுதலை முன்னணி தோல்வியுற்றால், அது நாட்டையும் மக்களையும் மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் வெற்றி நாட்டை புதிய அபிலாஷைகளுடன் ஒரு பாதையில் வழிநடத்தும் என்றும் திஸாநாயக்க கூறினார்.
நீண்டகாலமாக அரசாங்கங்கள் கடைப்பிடித்து வரும் தோல்வியடைந்த பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக புதிய பொருளாதாரப் பயணத்தை உருவாக்கும் சித்தாந்தத்தை மக்கள் விடுதலை முன்னணி விவாதிக்கும் அதே வேளையில் அரச சொத்துக்களை விற்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசாங்கம் திட்டங்களை வகுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
சமூகக் குற்றங்களை எதிர்த்துப் போராடவும், ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தை மாற்றவும், அதன் மூலம் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கவும் திட்டங்களை வகுப்பது குறித்தும் மக்கள் விடுதலை முன்னணிஆலோசித்து வருவதாக அவர் கூறினார்.