ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்தாக இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கங்கள் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இன்று(3) நள்ளிரவு பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, 12.28 மணி அளவில் 80 கி.மீ. ஆழத்தில், பைசபாத்தில் இருந்து 126 கி.மீ. கிழக்கு தொலைவில் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நிலநடுக்கம், 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதோடு, நள்ளிரவு 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் 100 கி.மீ தென் கிழக்கில் ஏற்பட்டுள்ளது.
அரைமணி நேரத்திற்குள் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்தாக கூறப்படுகிறது.
அதேவேளை, குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.