பாராளுமன்றத்தை 10 நாட்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 27ம் திகதி முதல் பாராளுமன்றம் இடைநிறுத்தப்படும் என்று விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறவுள்ள தேசிய சுதந்திர தினத்திற்கு பின்னர் மீண்டும் பாராளுமன்ற அமர்வு புதிதாக நடத்தப்படும். இதன்போது ஜனாதிபதி தமது கொள்கைப் பிரகடன உரையை ஆற்றவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றம் இவ்வாறு இடைநிறுத்தப்படுமாக இருந்தால், தற்போதுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுக்கள் அனைத்தும் கலையும் என்பது குறிப்பிடத்தக்கது.