விமான நிலைய கூட்டு நிபுணத்துவ தொழிற்சங்க தலைவர் உட்பட 28 அதிகாரிகளை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் கட்டாய விடுமுறை வழங்கி அனுப்பியுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் குறித்த தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜனவரி 2 ஆம் திகதி இலங்கையில் விமானப் பயண சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பியதாக கூறப்படும் கடிதத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது சட்ட மற்றும் தார்மீக நியாயம் இல்லாத தேவையற்ற நடவடிக்கை என்று கருதிய நிறுவனத்தலைவர், முறையான விசாரணை அடிப்படையில் குறித்த 28பேரையும் உடனடியாக கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவை செயற்படுத்தினார்.
விசாரணைகள் முடியும் வரை விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் எந்தவொரு வளாகத்திற்கும் இந்த அதிகாரிகள் அணுகுவது தடைசெய்யப்படும் என்று நிறுவனத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.