ஆப்பிரிக்க நாடான சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்களுடன் கடத்தப்பட்ட வணிக கப்பல் (எம்.வி. லிலா நார்போல்க்) இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவம் தொடர்பில் தகவலறிந்தவுடனேயே இந்திய கடற்படையினர் விரைந்து செயல்பட்டனர்.
அத்தோடு, 15 இந்தியர்கள் உட்பட 21 பணியாளர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், இந்திய கடற்படையின் MARCOS கமாண்டோக்கள் கப்பலில் சோதனை நடத்தியதுடன் கப்பலில் கடற்கொள்ளையர்கள் யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட கப்பலை மீட்க INS Chennai கடற்படை கப்பல் அனுப்பப்பட்டது. இந்திய கடற்படையின் கடுமையான எச்சரிக்கைக்கு பயந்து கடத்தல்காரர்கள் கப்பலை விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அத்துடன், கப்பல் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்திய கடற்படை செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடத்தப்பட்ட கப்பலைச் சுற்றியுள்ள நிலைமையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வந்ததாக தெரிவித்துள்ளார்.