புதுவருடப்பிறப்பை அடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு புதிய
தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக கண்டி மாவட்டப் பாராளுமன்ற, உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார்.
கண்டியில் நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு
தெரிவித்தார் தற்போது மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்தலைவராகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். காகம் கட்டிய கூட்டில் குயில் முட்டையிடுவது போல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரும் பொதுஜன பெரமுனயின் உதவியைப் பெற்று பாராளுமன்றப் பிரவேசம் பெற்றனர்.
இன்று அதனை மறந்து விட்டனர். ஆனால் குயில் மீண்டும் முட்டையிட காகத்தின் கூடுகளைநாடுவது போல் இவர்களும் அடுத்த தேர்தலில் போட்டியிட பொதுஜன பெரமுன கட்சியைநோக்கி வருவர் என்றும் குறிப்பிட்டார்.