பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் சகிபுல் ஹசன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சியின் சார்பில் சகிபுல் ஹசன் போட்டியிட்டு இருந்தார்.
எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்த நிலையில் சர்ச்சைக்குரிய முறையில் பங்களாதேஷில் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சகிபுல் ஹசன் இந்த தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளார்.
36 வயதான சகல துறை ஆட்டக்காரரான ஹசன், எதிர்த்து போட்டியிட்ட வரை விடவும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மகுரா நகர தொகுதியில் சாகிபுல் ஹசன் போட்டியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக சக்கிபுல் ஹாசன் அண்மையில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இதேவேளை நேற்றைய தினம் நடைபெற்ற பொது தேர்தலில் குறைந்த அளவான வாக்காளர்களே வாக்குகளை பதிவு செய்தனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.