அம்பாறை சேனநாயக்க சமுத்திர நீர்ப்பாசனக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்து வருவதனால் திங்கட்கிழமை (08) நண்பகல் குளத்தின் நீர் மட்டத்தினைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது குளத்தின் நீர்மட்டம் 105.10 அடியாக காணப்படுவதால் 05 வான் கதவுகள் 2.5 அடி அளவில் திறக்கப்படவுள்ளதாகவும் அம்பாறை பிரதேச செயலக பிரிவிலுள்ள பொல்வத்த, பலலந்த, இறக்காமம், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேச பிரிவுகளின் தாழ் நிலப் பிரதேசங்கள் ஆபத்தானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான கால்வாய்கள், ஆறுகள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.