மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்த மூன்று சந்தேகநபர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் குறித்த மாணவியை ஆரையம்பதி பகுதிக்கு கொண்டு சென்று, அங்கு அவரை தாக்கி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி அவரது பெற்றோருக்கு அறியப்படுத்தியுள்ளார்.
பின்னர் இது தொடர்பில் காவல்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 26 மற்றும் 32 வயதுக்கிடைப்பட்ட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.