கிராந்துருகோட்டை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் முச்சக்கரவண்டி சாரதி மரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் கிராந்துருகோட்டை பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த முச்சக்கரவண்டியானது நேற்று (7) இரவு உல்ஹிட்டிய ஓயாவின் பாலத்தில் பயணித்துள்ளது.
இந்நிலையில் பாலத்தில் பயணித்த முச்சக்கரவண்டியானது சாரதியுடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாரதி பாலத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.