இலங்கையில் போதைப்பொருளை ஒழிப்பதற்காக யுக்திய நடவடிக்கைகளால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பாராட்டுக்குரியது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் நீதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்யும் மூளையாக செயல்பட்டவர்களை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை அமைதியாக இருப்பதாகவும், மக்கள் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டம், தேசிய நல்லிணக்கக் கூட்டணி அலுவலகங்கள் தொடர்பான சட்டம் குறித்தும் தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.