தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் கடந்த ஆண்டு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் இந்நோயினால் பாதிக்கப்பட்ட 1,550 பேரில் 173 பேர் பாடசாலை மாணவர்கள் அடங்குவதாகவும் தொழுநோய் எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும், 315 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் இரண்டாவது மற்றும் மூன்றாவது அதிக நோயாளர்கள் கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தும் பதிவாகியுள்ளனர்.
இதேவேளை, பாடசாலை மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்த நோயைக் கருத்தில் கொண்டு, தொழுநோய் தொற்றுகளைக் கண்டறிவதற்கான தேசிய அளவிலான திட்டம் பாடசாலை மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.