மாட்டுக்கறி சமைத்த அண்டாவில் தமிழ்பொங்கல் விழாவிற்கு வந்த தமிழ் மாணவிகளுக்கு முட்டரிசிச்சோறு சமைத்து பகிர்ந்ததாக திருகோணமலை ARAFA HOTEL மீது குற்றம் சாட்டப்பட்டு சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பில் இருந்து மாணவிகளை பொங்கல் விழாவுக்காக திருகோணமலைக்கு அதிகாலை மூன்று மணிக்கு அழைத்து சென்றுள்ளனர், இவர்களுக்கான உணவு, Minaral water போன்றவற்றை வழங்குவதற்கான கோட்டேசன் மூலம் கொத்திராந்தினை திருகோணமலை ARAFA HOTEL காரர்கள் பொறுப்பெடுத்ததாகவும் அவர்கள் வழங்கிய உணவிலேயே பங்கம் விளைவித்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் குறித்த மாணவிகளுக்கு காலை, மதியம் என இரு வேளைக்கும் சேர்த்து யோகட் கப்பில் முட்டரிசி சோறு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
பல மணிநேரம் கால் கடுக்க நின்ற அம்மாணவிகளுக்கு அவர்களுக்கு பச்சை தண்ணீர் கூட கொடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் மாணவிகளின் நலனில் அக்கறை இன்றி கொட்டும் மழையில் மாணவர்கள் மதிய உணவு இன்றி மட்டக்களப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டமை மிகவும் கவலைக்குரிய விடயம். இது சம்மந்தமாக திருகோணமலை சுகாதார பரிசோதகர்கள் உடனடி கவனத்திற்கொள்ளும்படி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.