மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரு பாரிய கோழி பண்ணைகளை உடைத்து கொள்ளையிட்ட தந்தையையும் மகனையும் வியாழக்கிழமை மாலை (11) காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ எம் எஸ் ஏ ரஹீம் தெரிவித்தார்.
குறித்த இரு கோழிப் பண்ணைகளையும் மூடி விட்டு பண்ணைகளின் உரிமையாளர்கள் தமது வீடுகளுக்கு சென்றிருந்த நிலையில் கடும் மழையை பயன்படுத்தி, இரவு நேரத்தில் குறித்த பண்ணைகளின் முன்பக்கத்தை உடைத்து, உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த தண்ணீர் இயக்கும் இயந்திரங்கள், மின்விசிறிகள், ஜெனரேட்டர்கள் குளிர்சாதன பெட்டி, தோட்டத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற பெருமளவிலான பொருட்களை கொள்ளையிட்டு சென்றிருந்தனர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.