பிரதேச செயலகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 18,333 பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்த வருடம் முதல் 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
‘குரு அபிமானி’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் ஆசிரியைக்கும் 2,500 ரூபா வழங்கப்படவுள்ளதுடன், இத்தொகை இந்த வருடம் எப்படியாவது அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், நேற்று (11ம் திகதி) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு குழந்தைக்கு கற்பிப்பது ஒரு தனியான பணி என்பதால், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இது குறித்து நல்ல புரிதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், 2024 க்கு தேவையான ஒதுக்கீடுகள் கிடைக்காவிட்டாலும், புதிதாக சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் உள்ள மொத்த முன்பள்ளிகளின் எண்ணிக்கை 19,216 எனவும், மொத்த முன்பள்ளி ஆசிரியர்களின் எண்ணிக்கை 37,000 எனவும், பட்டதாரி முன்பள்ளி ஆசிரியர்கள் 29,000 எனவும், முன்பள்ளி மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 585,000 எனவும் அமைச்சர் கூறினார்.