மலையக தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேம நிதி (EPF),ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிகள்(ETF) பல வருடங்களாக வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில தோட்டப் பகுதிகளில் உள்ள பங்குகளை பல்வேறு தொழிலதிபர்களுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக குறித்த மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தேயிலை பயிரின் 70% க்கும் அதிகமானவை சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களால் குறைந்தபட்ச நிலத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அரச மற்றும் நிறுவன உரிமையுடைய தேயிலைத் தோட்டங்கள் குறைந்த பங்களிப்பையே வழங்கின்றன என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற தோயிலை தோட்ட நிலங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு விற்காமல்,தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கி,அவர்களை ஒரு தொழில்முனைவோராக மாற்றும் பணியை ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முன்னெடுப்போம்.
இந்த மலையக சமூகத்தை தோட்டத் தொழிலாளர்களாக இல்லாமல் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவதன் மூலம் தேயிலை உற்பத்திக்கு அதிக பங்களிப்பை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.