Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள்; தடுத்து வைத்து நாய்கள் மூலம் அச்சுறுத்திய இராணுவ சிப்பாய்!

மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற ஊழியர்கள்; தடுத்து வைத்து நாய்கள் மூலம் அச்சுறுத்திய இராணுவ சிப்பாய்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மின்சாரத்தை துண்டிக்க சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை தடுத்து வைத்து நாய்களை வைத்து அச்சுறுத்தியதாக கூறப்படும் இராணுவ சிப்பாயின் மனைவி உட்பட மற்றுமொருவரை மொரந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மொரந்துடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

இராணுவ சிப்பாயின் மனைவி மற்றும் தாய் ஒன்றாக வசித்து வருவதுடன் அவர்களது வீட்டிற்கு அருகிலேயே இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரியின் வீடும் அமைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி ஜப்பான் நாட்டில் வசிப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஜப்பான் நாட்டில் வசிக்கும் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரியின் வீட்டு மின்சாரத்தை துண்டிப்பதற்காக 4 மின்சார சபை ஊழியர்கள் வந்துள்ளனர்.

இராணுவ சிப்பாயின் தாய் மின்சார சபை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து இரு ஊழியர்கள் மாத்திரமே வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றைய ஊழியர்கள் அவர்கள் பயணித்த வாகனத்தில் இருந்துள்ளனர்.

வீட்டிற்குள் வந்த ஊழியர்கள் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி வீட்டு மின்சாரத்தை துண்டித்துள்ளனர்.

இதனையடுத்து இராணுவ சிப்பாயின் மனைவி தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இராணுவ சிப்பாயின் மனைவியின் சகோதரி இணையவழி மூலமாக ஏற்கனமே மின்சார கட்டணத்தை செலுத்தி விட்டதாக கூறி கட்டண சீட்டின் புகைப்படத்தை கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் இராணுவ சிப்பாயின் மனைவி ஊழியர்களிடம் கூறியும் அவர்கள் அதனை தவிர்த்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த இராணுவ சிப்பாயின் மனைவி ஊழியர்களை அடைத்து வைத்து துண்டித்த மின்சார இணைப்பை மீண்டும் வழங்குமாறும் இல்லையெனில் நாய்களை வைத்து கடிக்க செய்வதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரந்துடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி
செய்திகள்

கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி

November 9, 2026
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!
செய்திகள்

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

November 9, 2026
இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!

November 9, 2026
நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்
செய்திகள்

நீதிமன்ற உத்தரவை புறக்கணித்த பிக்குகள்?; ருவான்வெலிசாயவில் தொடரும் போராட்டம்

November 9, 2026
ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!
செய்திகள்

ஞானசார தேரரை நீதிமன்றத்தில் காவி உடையில் ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

November 9, 2026
போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!
செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என மருத்துவ அறிக்கை கோரிப் பொலிஸார் தொல்லை; 10 மணிநேரத்திற்கும் மேலாகத் தடுத்து வைத்ததாக முச்சக்கரவண்டி சாரதி குற்றச்சாட்டு!

November 9, 2026
Next Post
இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்!

இன்றைய வானிலை தொடர்பான எதிர்வுகூறல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு