கிளிநொச்சியில் குடும்ப தகறாறு தீவிரமடைந்ததில் கணவன் மனைவி மீது வெடி வைத்ததில் மனைவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (11-04-2023) கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரையான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குடும்பத்தறாறு காரணமாக கணவன் மனையி இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு தீவிரமடைந்ததில் கணவன், மனைவி மீது இடியன் துப்பாக்கி மூலம் வெடி வைத்துள்ளார்.
இதன்போது கால்பகுதியில் ஏற்பட்ட படுகாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.காயமடைந்த மனைவி நிறை மாத கர்ப்பிணி எனவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரையான் பொலிஸார் மெற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.