மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலக பிரதேச செயலாளராக பணிபுரிந்து மாற்றலாகி சென்ற திருமதி. தெட்சணாகௌரி டினேஸ் அம்மணி அவர்களுக்கு சேவைநலன் பாராட்டும், கௌரவிப்பும் வழங்கப்பட்டதுடன் புதிதாக பதவியேற்ற பிரதேச செயலாளர் திரு சி.சுதாகர் அவர்களை கௌரவத்துடன் வரவேற்றும், சமுர்த்தி திட்டத்தில் கடந்த 24 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி அரச பணியில் ஓய்வுபெற்ற திரு வே.கந்தசாமி அவர்களின் சேவை நலனை பாராட்டி கௌரவிப்பும் , வாழ்த்துக்களும் நேற்று (2024.01.13) சிறப்பாக பட்டிப்பளை சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு. S.தியாகராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதில் மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச உதவி பிரதேச செயலாளர் திருமதி. மேனகா புவிக்குமார் அம்மணி அவர்களும், கணக்காளர் திரு M.முகிலன் அவர்களும், மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. S.பிரபாகரன் ஆகியோருடன் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி முகாமையாளர் திரு .மோசேஸ் புவிராஜ் அவர்களும் மாவடிமுன்மாரி சமுர்த்தி முகாமையாளர் திரு. K.சந்திரகுமார் அவர்களும் வங்கி வலய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகஸ்த்தர், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் என பலரும் கலந்து வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொண்டனர்.
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-07.56.16_ac226cc4.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-07.56.17_d6d88d3a-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-07.56.17_15ff8093-1024x826.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-07.56.18_652965a6-1024x740.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-07.56.18_714e5b26-1024x768.jpg)
![](https://battinaatham.net/wp-content/uploads/2024/01/WhatsApp-Image-2024-01-14-at-07.56.19_59a81a85-768x1024.jpg)