சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, உலகில் 60 சதவீத வேலைகள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற பேட்டியில் அதன் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார்.
இருப்பினும், வளரும் நாடுகளில் பாதிப்பு 40 சதவீதம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்று கூறியுள்ளார்.