Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவனின் விரலை வெட்டிய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

சிறுவனின் விரலை வெட்டிய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

3 years ago
in செய்திகள்

சிறுவன் ஒருவனை வாளால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 11 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், சம்பவத்தில் காயமடைந்த 14 வயது சிறுவன் வைத்தியசாலையில் இருந்து வௌியேறியதை தொடர்ந்து சந்தேக நபர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்து இன்று வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்போது சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை நீதிமன்றில் வழங்கிய பொலிஸார், சந்தேகநபர் சிறுவனை தாக்க பயன்படுத்திய வாளைக் கண்டுபிடிக்க மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ராகம, பொடிவீகும்புர பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 4ஆம் திகதி இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் ஏற்பட்ட மோதலின் போது சந்தேகநபர் வாளால் சிறுவனை தாக்கியமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தாக்குதலில் சிறுவனின் இடது கையின் ஒரு விரல் துண்டாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
Next Post
விவசாய வினாத்தாளினை வெளியிட்ட ஆசிரியர் கைது!

உயர்தர வினாத்தாள் வௌியான சம்பவம்; மற்றுமொருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு