நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட VAT அறவீட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
உரிய முறையின்றி சிலர் வரி வசூலிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர கூறினார்.
இது தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பிலான முறைப்பாடுகளை எழுத்து மூலம் சாட்சியங்களுடன் https://www.google.com/search?q=cgir%40ird.gov.lk&sourceid=chrome&ie=UTF-8 எனும் இணையத்தள முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.
அத்துடன்,
ஆணையாளர் நாயகம்,
உள்நாட்டு இறைவரி திணைக்களம்,
சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை,
கொழும்பு 02.
என்ற முகவரிக்கு கடிதம் மூலம் முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்தார்.