சுமார் 13 வருடங்களாக மதிய உணவு வழங்கி வந்த ஹோட்டல் உரிமையாளரின் மனைவியை கடுமையாக காயப்படுத்திய பிச்சைக்காரனை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாசகன்பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மார்ட்டின் லியனகே என்ற பிச்சைக்காரனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், குறித்த பிச்சைக்காரனின் மனநல அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கொழும்பு போக்குவரத்து காவல்துறைக்கு அருகில் ஹோட்டல் நடத்தி வரும் ஹோட்டல் உரிமையாளர், குறித்த பிச்சைக்காரனுக்கு தினமும் சாப்பாடும் பானமும் கொடுத்து வந்திருக்கின்றார்.
இந்த கடை உரிமையாளர் 13 வருடங்களாக அவருக்கு உணவளித்து வருகிறார்.
குறித்த பிச்சைக்காரர் மஹியங்கனைக்கு அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றவராவார், இவர் சாப்பாடு தாமதமாகியதால் ஆத்திரமடைந்து, கடை உரிமையாளரின் மனைவியின் தலையில் சரமாரியாக தாக்கி, கண்ணுக்கு மேல் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.