Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்த மீசாலை மக்கள்!

வீதியை விரைவாக புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு அனுப்பிவைத்த மீசாலை மக்கள்!

3 years ago
in செய்திகள்

தமது வீதியை விரைந்து புனரமைத்து தருமாறு தமது ஒரு நாள் வேதனத்தை வடமாகாண ஆளுநருக்கு மீசாலை மக்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு, இராமாவில் பகுதியில் உள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை புனரமைத்து தருமாறு கோரி 96 பேர் தமது ஒரு நாள் ஊதியமான 1,000 ரூபாய் வீதம் 96,000 ரூபாய் காசோலையும் கடிதம் ஒன்றினையும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ்க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேற்குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தென்மராட்சி பிரதேச செயலக பிரிவின் ஜே.320 மற்றும் ஜே.321 ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு நடுவே அமைந்துள்ள தட்டாங்குளம் பிள்ளையார் வீதியை மேற்குறித்த இரு கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இரு கிராம சேவகர் பிரிவு மக்கள் தவிர்த்த அயல் கிராமங்களில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வீரசிங்கம் மத்திய கல்லூரி, வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிற்கு செல்வதற்கும் இந்த வீதியினையே பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிக்கவே முடியாத நிலையில் பெரிய குழிகளுடன் இவ்வீதி காணப்படுகிறது. இவ்வாறான பாரிய குழிகளால் மழை காலங்களில் அதிக விபத்துக்களும் நடைபெறுகின்றன.

கடந்த 18 வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் காணப்படும் இவ்வீதியினை புணரமைத்து தருமாறு சகல தரப்பினர்களிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளோம்.

இருப்பினும் இது வரை எந்தவிதமான சிறு புணரமைப்புக் கூட செய்யப்படாமல் பயன்படுத்தவே முடியாத வீதியாக எமது வீதி மாற்றமடைந்து வருகின்றது.

நாளுக்கு நாள் மிக மோசமான வீதியாக மாறி வரும் இவ்வீதியை உடனடியாக புனரமைத்து தர வேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.

இவ்வீதி புனரமைப்பிற்காக எமது பகுதியில் வசிக்கும் ஒவ்வொருவரிடமும் இருந்து அவர்களின் ஒரு நாள் வேதனமான (ஆயிரம் ரூபாவை) சேகரித்து வங்கியூடாக சுமார் 96 ஆயிரம் ரூபாவினை காசோலையாக அனுப்பி வைத்துள்ளோம்.

அப்பணத்தினையும் புனரமைப்பு பணிகளுக்கான செலவு நிதியில் சேர்த்துக் கொள்வதோடு, வீதியின் புணரமைப்பு பணிகளை துரித கதியில் முன்னெடுக்குமாறு மீண்டும் கோரிக்கை முன்வைக்கின்றோம்.” என்றுள்ளது.

அதேவேளை, குறித்த கோரிக்கை கடிதத்தின் பிரதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, யாழ்.மாவட்ட செயலர், சாவகச்சேரி பிரதேச செயலர், கொடிகாமம் பிரதேச சபை செயலாளர் உள்ளிட்டோருக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!
செய்திகள்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கில் பூஜிதவுக்கு மரணதண்டனை!

July 31, 2026
சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!
செய்திகள்

சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட பல மில்லியன் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

July 31, 2026
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம்; ஹேமசிறிக்கும் மரணதண்டனை!

July 31, 2026
நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுவயது திருத்தத்தை உடனே வாபஸ் பெறுங்கள்; அரசாங்கத்துக்கு அங்கிலிக்கன் திருச்சபை வலியுறுத்தல்!

July 31, 2026
கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு
செய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை பேருந்தில் இளம் சாரதி எடுத்த விபரீத முடிவு

July 31, 2026
Next Post
இளம் பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்திய விகாராதிபதி உட்பட மூவர் மீது விசாரணை!

இளம் பிக்குவை தகாத முறைக்கு உட்படுத்திய விகாராதிபதி உட்பட மூவர் மீது விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு