யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலினால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் கொக்குவில் மற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில் கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார். பரிசோதனையின்போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மற்றும் முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவரும் டெங்கு தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக யாழ் மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.