இலங்கை தமிழரசுக்கட்சி ஜனநாயக ரீதியான கட்சியென்பதுடன் ஜனநாயக ரீதியாகவே செயற்படும்.ஒட்டுக்குழுக்கள் போன்று அச்சுறுத்தி கட்சி செய்ய முடியாது.அனைவருக்கும் கருத்து தெரிவிப்பதற்கான ஜனநாயகத்தினை வழங்கியுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார் அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் (19) மாலை இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட கிளையின் நிர்வாக கூட்டம் நடைபெற்றது.அக்கூட்டத்தினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சிகள் பல இன்று மகாநாடுகளை நடாத்துகின்றது.ஆனால் அக்கட்சிகளின் மாநாடுகள் தொடர்பில் தமிழ் மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை.இலங்கை தமிழரசுக்கட்சியின் மகாநாடு தொடர்பிலும் தலைமை தெரிவு தொடர்பிலும் தமிழ் மக்கள் அதிக கவனம் செலுகின்றார்கள் என்றால் அது தமிழ் மக்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை இதன் மூலம் அனைவரும் உணர்ந்துகொள்ளமுடியும்.
கருணா போன்றவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை யாரும் செவிமடுப்பதில்லை.அவர் வருவதையும், கருத்து தெரிவிப்பதையும் யாரும் கருத்தில் கொள்வதுமில்லை.
அதேசமயம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.