Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் அரசியல் தலைமைகளை சாடிய அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்!

தமிழ் அரசியல் தலைமைகளை சாடிய அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இங்கு தமிழினத்தை அழித்த,அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று 19 நடைபெற்றது.

லண்டனில் உள்ள ஈழப்பதீஸ்வரர் ஆலயம் மற்றும் விருட்சம் அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் இந்த இரண்டு மாடிக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் லண்டனில் உள்ள ஈழப்பதீஸ்வரர் ஆலயம் மற்றும் விருட்சம் அமைப்பு ஆகியவற்றிடம் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இதற்காக 75 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் வி.எஸ்.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன்,பிரதிக்கல்வி பணிப்பாளர் சி.சஜீவன்,இலண்டன் பதீஸ்வரர் ஆலயத்தின் இணைப்பாளர் எல்.அனோஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மிகவும் பின்தங்கிய பகுதி பாடசாலையான காயான்குடா கண்ணகி வித்தியாலயத்தில் நிலவும் பாரியளவிலான பௌதீக பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யும் வகையில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

கிழக்கில் தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகி வருகின்றது.இதற்கு காரணம் 75வருடமாக தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களை பொய்கூறி ஏமாற்றி வந்ததே காரணமாகும்.இன்றும் தமிழர்களை ஏமாற்றும் செயற்பாடுகளையே தமிழ் அரசியல் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

கிழக்கில் தமிழர்களினை அழித்த, அழித்துக்கொண்டிருக்கும் பெருமை தமிழ் அரசியல் தலைமைகளையே சாரும்.தமிழர்களை யாரும் அழிக்கவில்லை.இந்த தமிழ் அரசியல் தலைமைகளே பொய்களை கூறி தமிழ் மக்களை அழித்துவந்தனர் என அந்த நிகழ்வில் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!

காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு