உயிரிழந்த கட்சி தலைவர்( புதிய இணைப்பு)
சர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் போட்டியிட்ட கட்சியே அபே ஜனபல பக்ஷய.
எனினும் குறித்த தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் சமன் பெரேரா ஆகியோருக்கு இடையில் கடும் சர்ச்சையும் மோதல்களும் ஏற்பட்டிருந்தது.
பின்னர் குறித்த கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக அதுரலியே ரத்ன தேரர் நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை 22 பெலியத்தை நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அக்கட்சியின் தலைவர் சமன் பெரேரா , இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த இன்னும் நால்வரும் குறித்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
முதல் இணைப்பு
தங்காலை, பெலியத்த பகுதியில் டிபென்டர் வாகனத்தில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றுமொரு வாகனத்தில் வந்த குழுவினரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் உள்ள வெளியேறும் பகுதியில் இன்று திங்கட்கிழமை (22) குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்து வாகனத்தில் பயணித்த ஐவரில் நால்வர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதுடன், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.