Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
“தமிழரசு கட்சி தேர்தலில் முறைக்கேடு- 13 பேரின் பெயர்கள் நீக்கம்; மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுட்டிக்காட்டு!

“தமிழரசு கட்சி தேர்தலில் முறைக்கேடு- 13 பேரின் பெயர்கள் நீக்கம்; மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுட்டிக்காட்டு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக, மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்ற தான் உட்பட 13 பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் தாங்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரஜனி ஜெயபிரகாஸ் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

இந்த தேர்தலுக்கு கட்சியின் உறுப்புரிமை கொண்ட கொழும்பு மற்றும் வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 350 பேருக்கு வாக்களிப்பதற்கான தகுதி செய்யப்பட்டு அவர்களுக்கான வாக்களிப்புக்கு பெயர்பட்டியல் அனுப்பப்பட்டிருந்தது

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தைச் 50 பேர் சென்றிருந்த நிலையில் வாக்களிப்பதற்கான பெயர் பட்டியலில் மகளிர் அணி செயலாளராகிய எனது பெயர் உட்பட 13 பேரின் பெயர்கள் வெட்டப்பட்டிருந்தன. வாக்களிக்க உட்செல்ல எங்களை அனுமதியளிக்கவில்லை.

இது தொடர்பாக மாவட்ட தலைவருக்கு அறிய படுத்தியும் அவர் எதுவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளை கொழும்பில் இருந்து கட்சியிலையோ, கட்சி கிளையிலையோ, மாவட்டகிளையிலையோ உறுப்புரிமை இல்லாத சிங்காரவேல் மலர்விழி என்பவரின் பெயர் பட்டியில் இடப்பட்டு அவர் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டு அவர் வாக்களித்துள்ளார்.

அதேவேளை அங்கு வாக்களிப்பதற்காக சென்றிருந்த பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட ரவிராஜ் சசிகலாவின் பெயர் உட்பட 7 மாவட்டங்களில் பலரது பெயர்கள் விடுபட்டிருந்தன. இதன் போது அங்கு அந்த மாவட்ட தலைவர்கள் செயற்பாட்டினையடுத்து சசிகலா உட்பட விடுபட்டிருந்த 7 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை வாக்களிக்க அனுமதி வழங்கினர்.

ஆனால், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எங்கள் 13 பெயர்களை வெட்டி வாக்களிக்க அனுமதியளிக்காமை தொடர்பாகவும் யார்? எங்கள் பெயரை வெட்டினார்கள் என பல கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டோம் அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை என்றார். .

அதேவேளை, அங்கிருந்த நாங்கள் ஸ்ரீ தரனுக்கு ஆதரவானவர்கள் என்பதால் உங்கள் பெயர் வெட்டப்பட்டுள்ளதாக ஒருவர் இரகசியமாக தெரிவித்தார் இவ்வாறான நிலையில் வாக்களிப்பு முடிவுற்று முடிவு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக கட்சி முன்னால் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நிர்வாக செயலாளர் கணநாயகம் ஆகியோரிடம் எங்களது வாக்களிக்கும் உரிமையை மறுத்தமை தொடர்பாக முறையிட்டுள்ளதுடன் இது ஒரு ஜனநாயக தேர்தலா? மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு வாக்களிப்பதற்காக சென்று வாக்களிக்க அனுமதி மறுத்தமை பெரும் ஏமாற்றமானதும் கவலையானதுமாகும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ஓர்க்கிட் மலர்

August 2, 2026
மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு
செய்திகள்

மட்டக்களப்பில் “கூரிய பார்வை, சிறந்த கற்றல்” திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

August 2, 2026
அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்
செய்திகள்

அஸ்வெசும கொடுப்பனவில் மோசடி செய்த இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியலில்

August 2, 2026
சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச
அரசியல்

சிறைச்சாலையை நிர்வகிக்கத்தெரியாத அனுரஅரசு பதவி விலக வேண்டும்; சஜித் பிரேமதாச

August 2, 2026
மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது
செய்திகள்

மஹர சிறைச்சாலையை சுற்றியுள்ள பகுதிகளின் ஊடரங்கு நீக்கப்பட்டது

August 2, 2026
இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?
செய்திகள்

இலங்கையின் சமகால நிலவரங்களை பார்த்து அச்சம்கொண்டுள்ள 10 கோடி ரூபாய் தண்டம் விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி?

August 2, 2026
Next Post
எக்ஸ் தளத்தின் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான அப்டேட்!

எக்ஸ் தளத்தின் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான அப்டேட்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு