Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகளாவிய சதுரங்க மேடை போட்டிகளுக்கு யாழ் சிறுவன் தெரிவு!

உலகளாவிய சதுரங்க மேடை போட்டிகளுக்கு யாழ் சிறுவன் தெரிவு!

3 years ago
in செய்திகள், விளையாட்டு

2024 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய சதுரங்க மேடைகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்ளும் வாப்புக்களை தன்வசமாக்கி சாதித்துக் காட்டியுள்ளார் யாழ்ப்பாணத்தின் இளம் சதுரங்க நாயகன் வேணுகானன் நயனகேஷன்.

குறிப்பாக இவ்வருடத்தில் மலேசியாவில் நடக்கவுள்ள Commonwealth Chess Championship, ஐரோப்பியாவின் அல்பானியா நாட்டில் நடைபெறவுள்ள World Cadet Championship, தென் அமெரிக்காவின் பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள World Youth Chess Championships, கசகஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ள Asian Youth Chess Championship, மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள Western Asia Youth Chess Championship, போன்ற போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.

மிக சிறுவதில் சதுரங்க போட்டி மேடைகளை கலங்கடித்துவரும் அவர் அண்மையில் கொழும்பு தர்மபால வித்தியாலயத்தில் நடைபெற்ற Sri Lanka National Youth Chess Championship 2023/24 – Finals (U08 Open) போட்டியில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவான 450 வீரர்களுடன் மோதி, சிறந்த முதல் பத்து வீரருக்குள் தெரிவாகி, தேசிய தெரிவின் இறுதிக்கட்ட போட்டியான Sri Lanka National Youth Chess Championships 2024 – Super League Events இற்கு தகுதிபெற்றார்.

இப்போட்டியானது கொழும்பு New Sports Ministry Pavilion ரொரிங்டனில் நடைபெற்றது. இது முதல் பத்து வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் நேரடியாக மோதும் (Round Robin) சவால் நிறைந்த போட்டியாக இருந்த போதும், இதில் 8/9 புள்ளிகளைப்பெற்று 08 வயது திறந்த பிரிவின் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் அதி உன்னத வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டார்.

அது மட்டுமன்றி இலங்கையில் 08 வயதுப்பிரிவில் அதிகூடிய சர்வதேச தரவரிசைப் புள்ளிகளை (Standard Rating 1116) வைத்திருக்கும் பெருமையையும் நயனகேஷன் தனதாக்கியுள்ளார்.

இவர் கடந்த ஆண்டில் பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தின் தேசிய போட்டியில் 07 வயது திறந்த பிரிவில் சாம்பியன் வென்றதன் ஊடாக கிறீஸ் நாட்டில் நடைபெற்ற போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். அத்துடன் உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற ஆசிய பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் பங்குபற்றி 6 ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்றுவரும் இந்த 8 வயது இளம் சதுரங்க வீரர் வேணுகானன் நயனகேஷன் தனது 4 வயதிலிருந்து சதுரங்கத்தை விரும்பி கற்றுகொள்ள ஆரம்பித்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் இடம்பெற்ற அனைத்து விதமான சதுரங்கப் போட்டிகளிலும் இவரது வயதுப் பிரிவில் 90 வீதமான சாம்பியன் பட்டங்கைளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
செய்திகள்

மஹர சிறைச்சாலையில் பதற்றம்-ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்

August 1, 2026
தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்
செய்திகள்

தமிழக முதலமைச்சர் விஜயை சந்திக்க தயாராகும் ரவூப் ஹக்கீம்

August 1, 2026
மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்
அரசியல்

மட்டக்களப்பில் பிரபு மற்றும் சுனில் ஹந்துன்நெத்திக்கு தெரியாமல் அபிவிருத்தி திட்டங்களை மாற்றும் NPP அமைப்பாளர்

August 1, 2026
மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

மூதூர் – அறபாநகர் பாலத்தின் தற்காலிக புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

August 1, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக சங்கு பதுக்கிய இருவர் கைது!

August 1, 2026
மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!
செய்திகள்

மீன்பிடிக்க சென்றவர் காட்டு யானைத் தாக்கி பலி!

August 1, 2026
Next Post
ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் பிணையில் விடுதலை!

ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் பிணையில் விடுதலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.