பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பொறுப்பேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் ஜீ. எல். பீரிஸூக்கு பொதுஜன பெரமுன அழைப்பு விடுத்துள்ளது.
பொதுஜன பெரமுனவில் இருந்து வெளியேறி டலஸ் தரப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக சுதந்திர மக்கள் சபை எனும் கட்சியை உருவாக்கி தற்போது அதில் பீரிஸ் செயற்பட்டு வருகின்றனர்.
இதனால் பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து பீரிஸ் நீக்கப்பட்டுவிட்டதாக கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே பீரிஸூக்கு, பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் அவர் இன்னும் பதிலளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.