அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து நடத்தும் பேரணி எதிர்வரும்
21ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரணி நாளை மறுதினம் புதன் கிழமை நாட்டின் ஐந்து இடங்களில் இருந்து ஆரம்பமாகும். ‘பாசத்துக்கான யாத்திரை’ சென ஹசே யாத்திரை) என்று பெயரிடப் பட்டுள்ள இந்தப் பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பை வந்தடையும் மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், இனவாத நடவடிக்கைகள் என்பவற்றின் பின்னணி தொடர்பிலும் தகவல்கள் வெளியிடப்படும். நாம் 21ஆம் திகதி கொழும்பை ஆக்கிரமிப்போம். எதிர்க் கட்சி எப்போதும் பலமாக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.