Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கை மீட்கவே முயற்சி எடுக்கிறோம்; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்!

கிழக்கை மீட்கவே முயற்சி எடுக்கிறோம்; இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்!

3 years ago
in மட்டு செய்திகள்

சுமந்திரனோ, சம்பந்தன் ஐயாவோ வந்து கிழக்கை மீட்க முடியாது. முன்னாள் தளபதி இங்கு வந்து வீர வசனங்களை பேசி உசிப்பேற்றிவிட்டு போய்விட்டார். இன்றும் தமிழ் மக்கள் நிர்க்கதியாக இருக்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார் பிள்ளையான் என்று அறியப்பட்ட இராஜாங்க அமைச்சர் சி. சந்திரகாந்தன்.

அத்துடன், கிழக்கு மாகாணத்தில் உறுதியான தலைமைத்துவத்தை ஏற்படுத்தி மாகாணத்தை மீட்டு கட்டியெழுப்ப எமது கட்சி முயற்சி எடுத்து வருகிறது. நிச்சயமாக கிழக்கை கட்டியெழுப்ப முடியும். எனவே அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

காரைதீவு விளையாட்டு கழகத்தில் நடந்த வெள்ளிவிழா சித்திரை புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும், கிழக்கில் அம்பாறை மாவட்டம் தனித்துவமானது. இங்கு தமிழ் மக்கள் இன்னல்களையும் சவால்களையும் பிரச்னைகளையும் எதிர்கொண்டு வருகின்றார்கள். உகந்தைமலையில் சிலை அமைக்க வேண்டும். இன்னும் பல பிரச்னைகள் இருக்கின்றன. இவற்றை வென்றெடுக்க வேண்டுமானால், அம்பாறை மாவட்டத்துக்கு என்று தனித்துவமான அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டும்.

பிரதேச சபை என்றாலும் சரி மாகாண சபை என்றாலும் வெவ்வேறு தீர்மானம் வேண்டும். பாராளுமன்றம் என்றால் மற்றுமொரு விதமான தீர்மானம் எடுக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தல் என்றால் இன்னும்ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். அப்படியென்றால் மட்டுமே அம்பாறை மாவட்ட அபிவிருத்தி சாத்தியமாகும். இல்லாவிட்டால் நாங்கள் எதை யும் பெற முடியாது. நடுத்தெருவில் நிற்க வேண்டிவரும் .1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் மட்டக்களப்பிலிருந்து பிரிந்து அம்பாறை மாவட்டம் தோற்றம் பெற்றபோது காரை தீவு, தம்பிலுவில், திருக்கோ வில், ஆலையடிவேம்பு என்று பல தனித்துவமான தமிழ் கிராமங்கள் போராட்டத்தில் அதிக அக்கறையை பங்களிப்பை செய்தன. அதன் காரணமாக பல பின்னடைவுகளையும் சந்தித்தன. எப்படி இருந்தாலும் கிழக்கின் ஓர் அங்கமே அம்பாறை மாவட்டம். எனவே, அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கலாசார பாரம்பரியங்கள் பொருளாதார அபிவிருத்தி கல்வி விருத்தி போன்றவற்றில் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இங்கு மீட்பர்கள் என்று பலரும் வருவார்கள். சுமந்திரனோ, சம்பந்தன் ஐயாவோ வந்து கிழக்கை மீட்க முடியாது. முன்னாள் தளபதி இங்கு வந்து வீரவசனங்களை பேசி உசிப்பேற்றி விட்டு போய்விட்டார். இன்றும் தமிழ் மக்கள் நிர்க்கதியாக இருக்கின்றார்கள். எனவே, உறு தியான – தரமான தலைமைத்து வங்களை கிழக்கிலே ஏற்படுத்த வேண்டும் என்று எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி மும்முரமாக பயணித்து வருகின்றது.

மட்டக்களப்பு எவ்வாறு உள்ளதோ அவ்வாறு அம்பாறை மாவட்டத்திலும் உங்களது ஒத் துழைப்பு இருக்குமாக இருந்தால் கிழக்கை மீட்டெடுத்து அபிவிருத்தி செய்வது ஒரு பெரும் பிரச்னையாக இருக்காது. நாங்கள் தரமான – உறுதியான தலைவர்களை தேடி அவர்களை உருவாக்கி வருகின்றோம். அதனூடாக நிச்சயமாக கிழக்கை மீட்டு அதனை கட்டி எழுப்புவோம் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு
செய்திகள்

மட்டு கிரான் குளம் கடலில் மீன்பிடிக்க சென்ற தோணி கவிழ்ந்த விபத்தில் இரு மீனவர்கள் உயிரிழப்பு ஒருவர் உயிருடன் மீட்பு

September 4, 2026
செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு
காணொளிகள்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுப்பு

September 4, 2026
மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டு வெல்லாவெளியில் பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உண்ட 11 வயது சிறுவன் உயிரிழப்பு!

September 4, 2026
Next Post
மட்டக்களப்பில் பேக்கரி உரிமையாளர் கைது!

மட்டக்களப்பில் பேக்கரி உரிமையாளர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.