Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்; அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும்; அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் .

அதனடிப்படையில் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனபடுத்தி வடக்கு கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

குறிப்பாக இந்த இலங்கைத் தீவிலே தமிழ் மக்களுக்கான உரிமைகள் இருப்புக்கள் மீறப்பட்டுக் கொண்டே வருகின்றது. ஆட்சிகள் மாறுகின்றது ஆட்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் மக்களுக்கு இன்று வரை எந்த ஒரு தீர்வு திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. அது வெறும் பேச்சுமட்டத்திலே மாத்திரமே நல்லிணக்கத்தை பேசி வருகின்றார்கள். இதய சுத்தியுடன் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுதர சிங்கள தரப்புக்கள் தயாராக இல்லை. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் சமூகங்கள் ,சமூக செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், அனைத்து தொழிற்சங்கங்களும் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்த ஆதரவினை வழங்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை சிதைக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றபட்டுள்ளது. இந்த நாட்டிலே ஊடக சுதந்திரத்தை , ஒரு பொதுமகனின் கருத்து சுதந்திரத்தை கூட இந்த அரசாங்கம் பறித்தெடுத்து கொண்டுதான் இருக்கிறது.இதன்மூலம் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை ஒடுக்க இவ்வாறான சட்டங்களை நடைமுறைபடுத்தி மல்லினபடுத்தி அவர்களை கைது செய்கின்ற தொலைதூர நோக்கோடு இந்த அரசு செயற்பட்டு வருகின்றது.

இவர்கள் ஒருபொழுதும் தமிழர்களுடைய அரசியல் தீர்வு, அரசியல் கைதிகள் விடுதலை , காணாமலாக்கப்பட்டோர் விவகாரம்,வடக்கு கிழக்கில் அத்துமீறி நிகழுகின்ற குடியேற்ற திட்டங்கள், திட்டமிட்ட பௌத்தமயமாக்கலையோ நிறுத்த போவதில்லை .எமக்கான தீர்வு கிடைக்கும் வரை நாம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ஆகவேண்டும் என்பது வரலாற்று உண்மை.

மேலும் கரிநாள் என்பது சிங்கள மக்களுக்கும் பொருத்தமானதே காரணம் இன்றைய தினம் சிங்கள மக்களுக்கும் எதிரான சட்டங்கள் உருவாக்கப்பட்ட வண்ணமே உள்ளது.இதனை அனைத்து தரப்புக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

சமநேரத்தில் எங்களுக்குரிய நிரந்தர அரசியல் தீர்வை பெற்று தருவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனடிப்படையில் 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கான ஆரம்ப புள்ளியோ முடிவு புள்ளியோ கிடையாது 13 இனை நாம் ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது.

ஆகவே தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை காணாது நாங்கள் எங்களுடைய போராட்டங்களையோ போராட்ட வடிவங்களையோ கைவிடப்போவதில்லை என பல்கலைக்கழக மாணவர் சமூகமாக வலியுறுத்துகின்றோம்.

எங்களுடைய இனம் விடுதலை பெற வேண்டும்.இனத்திற்குரிய நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனபடுத்த பூரண ஆதரவினை தந்துவுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர
செய்திகள்

அதிகாரத்திற்காக வடக்கிலும் தெற்கிலும் இனவாதம் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது; ஜனாதிபதி அனுர

May 19, 2025
சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சையில் சித்திபெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் அறிவிப்பு

May 19, 2025
முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு
அரசியல்

முஸ்லிம் காங்கிரஸின் காரைதீவு பிரதேச சபை பட்டியல் ஆசனம் சுழற்சி முறையில் இருவருக்கு

May 19, 2025
திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை
செய்திகள்

திருகோணமலை பகுதியொன்றில் துப்பாக்கிச்சூடு; இரண்டு மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

May 19, 2025
ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

ஓட்டமாவடி-நாவலடி பிரதான வீதியில் விபத்து; ஒருவர் உயிரிழப்பு

May 19, 2025
தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
செய்திகள்

தேசிய போர்வீரர் தினத்தையொட்டி முப்படை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

May 19, 2025
Next Post
மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் புதிரெடுக்கும் நிகழ்வு!

மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச் சந்தி பிள்ளையார் ஆலயத்தில் புதிரெடுக்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.