அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெண் பத்திரிகையாளரை தொடர்ந்து அவதூறு செய்த வழக்கில் டிரம்பிற்க்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் 10 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க ட்ரம்புக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜீன் கரோல் கேட்டதை விட 8 மடங்கு அதிகமாக நீதிமன்றம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என டொனால்ட் டிரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.