அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும் என்ற தலைப்பில் திருகோணமலையில் இன்று (27) துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இத்துண்டு பிரசுரம் வழங்கி வைக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசு கட்சியின் 17 வது தேசிய மாநாடு இன்று திருகோணமலையில் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு குறித்த குழுவினர் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் கைகளுக்கும் கிடைக்கக் கூடிய விதத்தில் இந்த துண்டு பிரசுரத்தை வழங்கி வருகின்றனர்.
தமிழ் தேசிய அரசியலின் வரலாற்றிலும் தமிழரசு கட்சியின் வரலாற்றிலும் முதல் முதல் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவு செய்வது கடந்த வாரம் நடைபெற்றுள்ளது.
இந்த ஜனநாயக பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட வேண்டுமெனவும் அலாவுகின்றோம்.
இலங்கை நாட்டின் உள்ளக அரசியல் பிராந்திய அரசியல் மற்றும் சர்வதேச சூழல் ஆகிய சிக்கல் மிக்கதாக காணப்படும் தற்போதைய சூழலில் தமிழரசி கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்றிருக்கும் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் முன்னாள் பாரிய கடற்பாடுகள் புரிந்துள்ளனர்.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் பாரம்பரியமாக என்று வரும் தமிழ் தேசிய கொள்கையுடைய அரசியல் கட்சி ஒன்றின் தலைமைத்துவம் என்ற வகையில் அவரும் அவர் சார்ந்த கட்சியினரும் அடங்கலாக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் என பின் வருவனவற்றை வலியுறுத்துகின்றோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.