லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கிலான சிறப்பு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றிருந்தது.
அதன்படி, நேற்றையதினம் (27) மட்டக்களப்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
அரசாங்கத்தின் தகவல் அறியும் சட்டத்திற்கு அமைவாக கிராமத்திற்கு தகவல் உரிமைகளைக் கொண்டு செல்தல் எனும் கருப்பொருளுக்கு அமைவாக இந்த இந்நிகழ்வு மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அதன்பிரகாரம், எங்கள் உரிமைகள் மற்றும் வளங்களை காப்பதற்காக மாகாண சபையை வலுப்படுத்தல், எதிர்காலத்திற்கு தங்களை தயார்படுத்துதல், மற்றும் இனவாத மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஓர் தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலுக்கு முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கலந்து கொண்டு எதிர்கால இளைஞர்களின் அரசியலில் அவர்களது பங்களிப்பும் தேர்தல்களின் முக்கியத்துவம் பற்றியும் இங்கு விரிவாக எடுத்துரைத்தார்.
ஜனநாயக இளைஞர் காங்கிரஸ், உரிமைகளுக்கான குரல் அமைப்பு, ஆகியவற்றின் கிராமிய சமுதாய குழுக்களின் வலையமைப்பு செயற்பாட்டின் கீழ் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான பிரஜைகளை ஒன்று திரட்டல் நிகழ்ச்சி திட்டத்தினூடக இச் செயற்பாடு நடைபெற்றுள்ளது.
இதன்போது தேர்தல் காலங்களில் பெண்களின் உரிமை சம்பந்தமாகவும், கலந்துரையாடப்பட்டன.
இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள முக்கியமான தேர்தலின்போது பெண்களின் பங்களிப்பு எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும், கிழக்கு மாகாண சபையின் தேர்தலில் முக்கியத்துவம் பற்றியும் இங்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.