தமிழர் தாயகத்தில் செயலுரு பெறும் இன அழிப்பு செயல்பாடுகளை நிறுத்த வலியுறுத்தி கிளிநொச்சியில் நாளையதினம் அடையாள எதிர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை காலை 9 மணிக்கு கிளிநொச்சி சேவை சந்தை வளாகத்தில் நடைபெற வுள்ள இந்த எதிர்ப்புப் போராட்டத்துக்கு யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார்.
தியாகத் தாய் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு நாளில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட் டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு அழைத்துள்ள அவர்,தேசிய இனப் பிரச்னைக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வலியுறுத்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதியைப் பெற்றுக்கொடுத்தல், அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்த வலியுறுத்தல், சமகாலத்தில் இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் அதனோடு இணைந்த அரச திணைக்களங்களால், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட இன, மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்தல். அட்டை பண்ணைகள், இறால் பண்ணைகள் அமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் கடல்வள அபகரிப்பை கைவிடக் கோரல், சீன நாட்டின் முதலீட்டாளர் களுக்கு கிளிநொச்சியின் காணிகளை தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்தல் ஆகிய ஆறு அம்சங்களை வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.