Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணில் நீக்கப்பட்டு மகிந்தவிற்கு பிரதமர் பதவி; மைத்திரிக்கு சிக்கல்!

ரணில் நீக்கப்பட்டு மகிந்தவிற்கு பிரதமர் பதவி; மைத்திரிக்கு சிக்கல்!

3 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

கடந்த 2018ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன அப்பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் நீதிமன்றில் சாட்சியமளிக்குமாறு பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோருக்கு அழைப்பாணை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மனு தொடர்பான அடிப்படை உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகளான எஸ். துரைராஜா, குமுதுனி விக்கிரமாதித்தன் மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன் பின்னர், குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்ததுடன், இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் சமர்ப்பித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதாக மனுதாரர் கூறுகிறார்.

அதன் பின்னரே அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் பிரதமருக்கு இருந்த போதிலும், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கி மகிந்த ராஜபக்சவை அந்த பதவிக்கு நியமித்தமை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை எனவும், அப்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அரசியலமைப்பின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் எனவும் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்களுக்கு “அனோரெக்சியா நெர்வோசா” (anorexia nervosa) என்ற பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு!

அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்களுக்கு “அனோரெக்சியா நெர்வோசா” (anorexia nervosa) என்ற பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு