பொதுவாக அதிகாலையில் எழுந்தால், ஆரோக்கியம், புத்துணர்ச்சி, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்றெல்லாம் பலர் கூறுவார்கள். ஆனால், அதிகாலையில் எழுவது எவ்வளவு நல்ல பழக்கமாக இருந்தாலும் அதனால் நோய் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அதிகாலை எழுந்துவிட்டால் அன்றைய நாள் முழுவதுமே நமக்கு நிறைய நேரம் இருப்பது போன்ற ஒரு உணர்வு கிடைக்கும்.
இது போன்று காலையில் சீக்கிரம் எழுபவர்கள் வேலைகளை செய்து முடித்த பின்னர் உடற்பயிற்சி, யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம்.
அந்த வகையில் காலையில் சீக்கிரம் எழுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படுகின்றன என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
பலன்கள்
- அதிகாலையில் எழுவதால் சூரிய ஒளியில் எம் மீது படும் போது அது வைட்டமின் D ஊட்டச்சத்தின் உற்பத்தியை மேம்படுத்துகின்றது.
- அதிகாலை பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இந்த கதிர்கள் மனித உடலில் உள்ள நரம்புகளில் படும் போது புத்துணர்ச்சி மற்றும் உற்சாகம் கிடைக்கும்.
- சரியான நேரத்திற்கு தூங்கி எழுவதால் கண்கள் ஆரோக்கியமாகவும் உடல் வலிமையாகவும் இருக்கும்.
- ஜோதிடத்தின் படி, சனிக்கிழமைகளில் அதிகாலை பொழுது கிரகண சக்தி பலம் பெற்றிருக்கும். இது போன்ற நேரங்களில் நல்லெண்ணெய் குளியல் போடுவது சிறந்தது. இது சாஸ்த்திரங்களில் கூறப்பட்ட விடயமாகும்.
- மன அழுத்தம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுவது சிறந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள் அதிகாலையில் எழுவதால் அவர்களின் வேலைகளை இலகுவாக செய்து கொள்ள முடிகிறது.
அதிகாலையில் எழும் பழக்கம் கொண்டவர்களுக்கு “அனோரெக்சியா நெர்வோசா” (anorexia nervosa) என்ற பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது, “அனோரெக்சியா நெர்வோசா” என்பது குறைந்த எடை, உணவு கட்டுப்பாடு, உடல் எடை அதிகரித்து விடுமோ என்ற பயம் போன்றவை அடங்கிய ஒரு உணவுக் கோளாறைக் குறிக்கின்றது. இந்த நோய் நிலைமை முற்றும் பட்சத்தில் தூக்கமின்மை ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
சிகிச்சை
அனோரெக்சியா நெர்வோசா நோயார்களுக்கு 58 சதவீத குணமடைதல் வாய்ப்பு இருக்கின்றன.
மேலும் மனநோய் சம்பந்தப்பட்ட இறப்புகளில் அனோரெக்சியா நெர்வோசா இரண்டாவது, அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது என்பது ஆய்வுகளின் விளக்கம்.
இது தொடர்பான போதியளவு விளக்கம் இல்லாமையினால் பொறுத்திருந்து பார்ப்பது நல்லது.