இலங்கை நாடாளுமன்றத்தின் 7ஆவது படைக்கலச் சேவிதராக குஷான் சம்பத் ஜயரத்ன இன்றைய தினம் (31) பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
நேற்று (30) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ள படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து, செங்கோல், படைக்கலச் சேவிதரின் வாள் ஆகியவற்றை புதிய படைக்கல சேவிதருக்கு கையளித்துள்ளார்.
ஓய்வுபெபெற்ற நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து புதிய படைக்கலச் சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்னவுக்கு சம்பிரதாயபூர்வமாக செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் கையளிக்கும் நிகழ்வு நேற்று நாடாளுமன்ற சபை மண்டபத்தின் வெள்ளிக் கதவுக்கு அருகில் இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் 42 வருடங்கள் நாடாளுமன்றத்தில் சேவையாற்றி ஓய்வுபெறவுள்ளதால் அடுத்துவரும் படைக்கலச் சேவிதருக்கு செங்கோல் மற்றும் படைக்கலச் சேவிதரின் வாள் என்பன சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
அதேசமயம் நாடாளுமன்றத்தின் 6ஆவது படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து 2018 முதல் படைக்கலச் சேவிதராக சேவையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.