உலகில் ஊழல் மோசடிகளற்ற நாடுகள் தொடர்பிலான பட்டியலில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது!
ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் இலங்கை 115ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஊழல் மோசடிகளற்ற நாடுகளை பட்டியலிடுவது தொடர்பிலான மதிப்பாய்வுகளில் இலங்கைக்கு 34 புள்ளிகள் மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளன.
இலங்கை மாத்திரமன்றி பாகிஸ்தானும் இந்த வரிசையில் பின்னடைவை சந்தித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
கடன் சுமை மற்றும் அரசியல் ஸ்திரத்தனமையற்ற காரணிகளே இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளையும் இந்த பட்டியலில் பின்னிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்நிலையில், ஊழல் மோசடிகளற்ற நாடுகளின் வரிசையில் டென்மார்க் முதல் இடத்தையும், பின்லாந்து இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து மூன்றாம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் முக்கிய விடயமாக அதிகளவு ஊழல் மோசடிகள் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் சோமாலியா முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.