Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இசைஞானியின் இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு!

இசைஞானியின் இசை நிகழ்ச்சி நடைபெறும் புதிய திகதி அறிவிப்பு!

2 years ago
in சினிமா, செய்திகள்

கால வரையறையின்றி பிற்போடப்பட்டிருந்த, இசைஞானி இளையராஜாவின் கொழும்பு இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20, மற்றும் 21ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் இந்த புதிய திகதிகளை தீர்மானித்து அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்காக முற்பதிவு செய்யப்பட்ட அதே அனுமதி சீட்டுகளை ஏப்ரல் மாதம் 20 மற்றும் 21 ஆகிய மாற்றுத்திகதிகளில் பயன்படுத்தலாம் எனவும் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் 27 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமையன்றும், ஜனவரி மாதம் 28 ஆம் திகதி முற்பதிவு செய்தவர்கள் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்றும் இசை நிகழ்ச்சியை கேட்டும் பார்த்தும் மகிழலாம் என ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜாவின் மகள் பாடகி பவதாரணி புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 26 ஆம் திகதி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, மேற்கூறிய தினங்களில் நடைபெறவிருந்த இசைநிகழ்ச்சி காலவரையறையின்றி பிற்போடப்பட்டு, இன்று ஏட்பாட்டுக்குழுவினரால் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

எனினும், இளையராஜாவின் மகள் பவதாரணியின் மறைவின் காரணமாக இசைநிகழ்ச்சி பிற்போடப்பட்டதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்ததுடன், யாரும் எதிர்பாராமல் நிகழ்ந்த பவதாரணியின் மரணத்தினால் அதிர்ச்சியையும் சோகத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இலங்கையின் இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயமாக ஏற்பாட்டுக்குழுவின் தற்போதைய அறிவிப்பு மாறியுள்ளது.

மேலும், இலங்கை இசை ரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வழங்கிய உறுதியை நிறைவேற்றும் முகமாக குறித்த அறிவிப்பு மாற்றம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

நாளை முதல் மழை அதிகரிக்கும்; பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

July 27, 2026
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்;  ரவிகரன் எம்.பி. ஆதங்கம்
செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் இரு கரம் கூப்பி கேட்டோம்; ரவிகரன் எம்.பி. ஆதங்கம்

July 27, 2026
தெவிநுவரவில் காவடி ஆட்டம் இடம்பெறுவதற்கு தற்காலிக தடை
செய்திகள்

தெவிநுவரவில் காவடி ஆட்டம் இடம்பெறுவதற்கு தற்காலிக தடை

July 27, 2026
அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்
செய்திகள்

அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் 3% கூடுதல் கட்டணம் அறவிடுவது சட்டவிரோதம்

July 26, 2026
விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்
செய்திகள்

விலங்குகளுக்கு உணவோ அல்லது நீரோ வழங்காதிருத்தல் குற்றம்; இலங்கையில் புதிய சட்டம்

July 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 புறாக்களை கடத்தி வந்தவர் கைது

July 26, 2026
Next Post
கொக்கட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; குற்றவாளிகள் தப்பியோட்டம்!

கொக்கட்டிச்சோலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு; குற்றவாளிகள் தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு