யுத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள முனைக்காடு வாவிக்கரையில் பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (30) மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியநிலையில் 25 கோடா பீப்பாய்கள் மற்றும் உபகரணங்களை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பலர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ.எதிரிமான்னவின் வழிகாட்டலில் மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவதினம் இரவு குறித்த வாவிக்கரை பகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதன் போது அங்கு கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் பொலிசாரை கண்டு தப்பி ஓடிய நிலையில் அங்கிருந்து கோடா மற்றும் 25 பீப்பாய்கள், கசிப்பு உற்பத்தி உபகரணங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.